மின்வாரிய தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 July 2021 11:04 PM IST (Updated: 19 July 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி நாகையில் மின்வாரிய தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி நாகையில் மின்வாரிய தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை சட்டையப்பர் கீழவீதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரி தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச திட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ திட்ட செயலாளர் மகேந்திரன், பொறியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மின்துறையை தனியாருக்கு தரை வார்க்கும் மின்சார சட்ட திருத்த மாசோதவை திரும்ப பெற வேண்டும். மின்சார சட்டத்தை திருத்தம் செய்வதை அடியோடு மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 
தொழிலாளர் நல சட்டங்கள்
பொதுமக்கள், மின்துறை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சட்டத்தை மாற்றியமைக்கும் போக்கை அடியோடு கைவிட வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.  இதில் ஐக்கிய சங்க செயலாளர் வாசு, அண்ணா தொழிற்சங்க திட்ட செயலாளர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story