கார் மோதி சிறுவன் பலி
ராமநத்தம் அருகே கார் மோதி சிறுவன் பலியானாா்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள வடகராம்பூண்டியை சேர்ந்தவர் துரைசாமி மகன் ஜெயக்குமார்(வயது 17). இவன் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக ஜெயக்குமார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயக்குமார் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story