பேரளம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாமியார், மருமகள் மீது மின்சாரம் பாய்ந்தது மருத்துவமனையில் அனுமதி


பேரளம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாமியார், மருமகள் மீது மின்சாரம் பாய்ந்தது மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 19 July 2021 11:37 PM IST (Updated: 19 July 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

பேரளம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாமியார், மருமகள் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நன்னிலம்:-

பேரளம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாமியார், மருமகள் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாமியார்- மருமகள்

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள அகரகடுவங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் மணிமேகலை (வயது60). இவருடைய மருமகள் அகிலா (30). சம்பவத்தன்று இவர்கள் வீட்டுக்கு அருகே உள்ள பொது குடிநீர் குழாயில் குளிக்க சென்றனர். 
அங்கு அகிலா குளித்துக்கொண்டு இருந்த நிலையில், மணிமேகலை பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி திடீரென அறுந்து அவர்கள் மீது விழுந்தது. 

மருத்துவமனையில் அனுமதி

இதில் மணிமேகலை, அகிலா ஆகிய 2 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பேரளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாமியாரும், மருமகளும் மயக்கம் அடைந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மின்கம்பி அறுந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த மின் வாரியத்தினர் அங்கு சென்று மின்கம்பியை சரி செய்தனர்.

Next Story