தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
நெமிலி
நெமிலி வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒவ்வொரு பள்ளிக்கும் இலவச பாடபுத்தகங்களை வாகனத்தில் அனுப்பி வைத்தார். அரும்பாக்கம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பர்வீன் பானு வேலை நேரம் முடிந்ததும் புத்தகங்களை வாங்காமல் பள்ளியை பூட்டிவிட்டு சென்றதால், வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் இதுகுறித்து பர்வீன் பானுவிடம் விசாரித்துள்ளார்.
இதுகுறித்து தலைமையாசிரியர் பர்வீன் பானு தனது சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். சங்க நிர்வாகி சிவராஜ் மற்றொரு வட்டார கல்வி அலுவலரான சம்பத்தை தொடர்பு கொண்டு தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி யது.
இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் நெமிலி காவல்நிலையத்திலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமாரிடமும் புகார் தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட ஆடியோ பதிவை ஆய்வு செய்து மஞ்சம்பாடி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story