3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா பூட்டுத்தாக்கு பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக பறக்கும் படை தாசில்தார் இளஞ்செழியனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூட்டுத்தாக்கு அடுத்த நாராயணபுரம் கிராமத்தில் சந்தேகப்படும்படியாக ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது.
அதனை சோதனை செய்தபோது ஆட்டோவில் ரேஷன் அரிசி சிதறி கிடந்தது. இதனால் அந்தப் பகுதியில் சோதனை செய்தபோது ஒரு மாட்டு கொட்டாயில் ரேஷன் அரிசி மூட்டைகளாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலாஜா சிவில் சப்ளை குடோனில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசியை அங்கு பதுக்கி வைத்திருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story