காட்சி பொருளாக மாறிய குடிநீர் தொட்டி சரிசெய்யப்படுமா?


காட்சி பொருளாக மாறிய  குடிநீர் தொட்டி சரிசெய்யப்படுமா?
x
தினத்தந்தி 19 July 2021 11:57 PM IST (Updated: 19 July 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

காட்சி பொருளாக மாறிய குடிநீர் தொட்டி சரிசெய்யப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்
கரூர் காளியப்பனூரில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரம் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி அதன் அருகே குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.  இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக மின் மோட்டார் பழுது மற்றும் சில காரணங்களால் குடிநீர் தொட்டியை பயன்படுத்தாமல் காட்சி பொருளாக மாறியது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.  இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு குடிநீருக்காக அலைந்தும் கிடைப்பதில்லை. இதனால் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.  எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரை சரிசெய்து தொட்டியில் குடிநீர் நிரப்பி வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story