கருப்பம்பாளையம் வரை அரசு நகரப்பேருந்து சேவை விரிவாக்கம்
கருப்பம்பாளையம் வரை அரசு நகரப்பேருந்து சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கரூர்
தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். அப்போது கருப்பம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு நகரப்பேருந்து வசதி இல்லாததால் அவரசத் தேவைகளுக்குக்கூட கரூர் சென்று வர மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று கருப்பம்பாளையம் வரை பேருந்து வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி தினந்தோறும் காலை 9.25 மணிக்கு அப்பிப்பாளைம் முதல் கரூர் வரை உள்ள நடையினை கருப்பம்பாளையம் தொட்டு இயக்கவும், மாலை 6.20 மணிக்கு கரூர் முதல் கருப்பம்பாளையம் வரை என ஒரு நாளைக்கு 2 முறை கருப்பம்பாளையத்திற்கு வரும் வகையில் நகரப்பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், நேற்று முதல் கருப்பம்பாளையத்திற்கு நகரப்பேருந்து சேவை வழங்கப்படுகின்றது. இதனை மாவட்ட கலெக்டர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தார். ஆய்வின்போது, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் முருகானந்தம், முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story