அரக்கோணத்தில் ரூ.18 லட்சம் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை
அரக்கோணத்தில் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
அரக்கோணம்
நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாகாலம்மன் நகர் திருத்தணி ரோட்டில் வசித்து வருபவர் லவக்குமார் (வயது 27). என்ஜினீயரான இவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மனைவியை அழைத்து வருவதற்காக ஆந்திர மாநிலத்திற்கு சென்றிருந்தார். நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது சுமார் 40 பவுன் தங்க நகை, 8 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிந்தது.
ரூ.18 லட்சம் மதிப்பு
இது குறித்து லவக்குமார் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும்வெள்ளி பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.18 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story