மரக்கன்று நடும் நிகழ்ச்சி
திருத்தங்கலில் உள்ள எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகாசி,
திருத்தங்கலில் உள்ள எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவரும், பள்ளியின் பழைய மாணவருமான தொழிலதிபர் சபையர் ஞானசேகரன் தலைமை தாங்கி 30 இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.என். (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கணேஷ்பாண்டியன், எஸ்.ஆர்.என். (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை நூர்ஜஹான், எஸ்.என்.என். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கண்ணபிரான், பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவி வாசுகி, பழைய மாணவர்கள் குணசேகரன், ஆனந்த ராஜ், ராமச்சந்திரன், கணேசன், சங்கர்கணேஷ், சங்கர், மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடந்த 1989-ம் ஆண்டு பிளஸ்-2 படித்த பழைய மாணவர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story