மகாராஜ பிள்ளை சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை


மகாராஜ பிள்ளை சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
x
தினத்தந்தி 20 July 2021 1:21 AM IST (Updated: 20 July 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் மகாராஜ பிள்ளை சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை:
பாளையங்கோட்டையில் தியாகி மகாராஜ பிள்ளை சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நினைவு தினம்

பாளையங்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் தியாகி மகாராஜ பிள்ளை நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 
காங்கிரஸ் -பா.ஜனதா

காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
பா.ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையிலும், அ.ம.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் பரமசிவன் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

சைவ வேளாளர் சங்கம்

மகாராஜ பிள்ளையின் பேரன்கள் மகராஜன், தென்காசி குமார், சைவ வேளாளர் சங்க தலைவர் மணி, தங்கம், சிலை அமைப்பு குழு தலைவர் மேகலிங்கம், மகாராஜ நகர் நலச்சங்கம் பாலன், முத்தையா பிள்ளை அறக்கட்டளை நாகலட்சுமி, செந்தில் ஆறுமுகம், கோமதி மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுதவிர பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள மகாராஜ பிள்ளை நினைவு சின்னத்திலும் பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர். இதில் ம.தி.தா. இந்து கல்வி அறக்கட்டளை செயலர் செல்லையா, மூத்த வக்கீல் மங்களா ஜவஹர்லால், சைவ சபை கண்ணன், கே.டி.சி. நகர் சைவ வேளாளர் சங்க செயலாளர் விசுவநாதன், சைவ வேளாளர் நெல்லை மாவட்ட இளைஞர் பேரவை நிறுவனர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story