சாலை தடுப்பு சுவரில் மோதிய அரசு பஸ்; 5 பயணிகள் காயம்


சாலை தடுப்பு சுவரில் மோதிய அரசு பஸ்; 5 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 20 July 2021 1:24 AM IST (Updated: 20 July 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சாலை தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதியது. இதில் 5 பயணிகள் காயம் அடைந்தனர்.

நெல்லை:
மதுரையில் இருந்து நெல்லைக்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை மதுரையை சேர்ந்த டிரைவர் சரவணன் (வயது 45) ஓட்டினார். இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் காலை 8 மணி அளவில் நெல்லை தச்சநல்லூர் ரவுண்டானா பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென பஸ்சின் குறுக்கே வந்தார். உடனே மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினார்.
அப்போது பஸ் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் பஸ்சின் முன்பக்க இருக்கைகளில் இருந்த 5 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story