டாஸ்மாக் கடையை பூட்டிய இரண்டு குடும்பத்தினர்


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 20 July 2021 1:31 AM IST (Updated: 20 July 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை பூட்டிய இரண்டு குடும்பத்தினர்

தொட்டியம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் பழையசேலம் ரோட்டில் அய்யப்பா நகர் எதிரே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகே நேற்று மாலை குடிபோதையில் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் அருகில் கிடந்த செங்கற்களால் தாக்கிக் கொண்டும், தகாத வார்த்தையில் பேசிக்கொண்டும் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது வீசிய ஒரு செங்கல் பக்கத்து குடியிருப்பு பகுதியில் சென்று விழுந்தது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்-சிறுமிகள் மீதும் பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் சிறுமிகளின் மீது கல் விழுந்ததால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் அரசு டாஸ்மாக் கடையை இந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனக்கூறி அந்த கடையை பூட்டு போட்டு பூட்டினர். தகவல் அறிந்து அங்கு வந்த தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கடையை திறந்து விட்டனர்.

Next Story