பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
காருகுறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவியை அடுத்த காருகுறிச்சி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சுமார் 800 பேர் அடையாள அட்டை வைத்துள்ளதாகவும், ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 50 பேருக்கு மட்டுமே வேலை அளிப்பதாகவும், எனவே அடையாள அட்டை உள்ள அனைவருக்கும், சீராக வேலை வழங்கக்கோரி, நேற்று காலை காருகுறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தின் முன்பு திடீரென பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரகுமார், பொன்லட்சுமி தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் வந்த காரணத்தினால் சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள வேலை தற்சமயம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும், மாவட்ட கலெக்டரிடம் புதிய வேலைக்கான அனுமதி வாங்கி, சுழற்சி முறையில் அனைவருக்கும் வேலை அளிப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story