பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் ஏரி தூர்வாரப்படுமா


பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் ஏரி தூர்வாரப்படுமா
x
தினத்தந்தி 20 July 2021 2:44 AM IST (Updated: 20 July 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் ஏரி தூர்வாரப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் ஏரி தூர்வாரப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 
நாடியம்மன் கோவில் ஏரி
பட்டுக்கோட்டை நகர மக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் நாடியம்மன் கோவிலுக்குச் சொந்தமான ஏரி சமீபகாலமாக கவனிப்பாரின்றி உள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கி சிறிய ஓடை போல காட்சியளிக்கிறது. கடுமையான வறட்சி காரணமாக குளத்துநீர் வற்றி தாமரைக் கொடிகள் படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பட்டுக்கோட்டை நகரின் பெரும்பாலான மக்கள் குளிப்பதற்கு நாடியம்மன் ஏரிக்கு வருகிறார்கள். நகரின் குல தெய்வமாக கருதப்படும் நாடியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த குளத்தில் குளித்து விட்டுத்தான் பக்தர்கள் கோவிலுக்கு செல்கிறார்கள். 
தூர்வார கோரிக்கை 
ஆனால் சில ஆண்டுகளாக கோவில் குளம் தூர் வாரப்படாததாலும் தாமரைக் கொடிகள் படர்ந்து மக்கள் குளிக்க முடியாத அளவு  குறைந்த அளவு தண்ணீருடன் சேறும் சகதியுமாக உள்ளது. 
எனவே வரும் மழைக்காலத்துக்குள் நாடியம்மன் கோவில் ஏரியை தூர் வாரி சுத்தப்படுத்தி நீர் நிரப்பி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story