வசூல் வேட்டையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்-போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் அதிரடி நடவடிக்கை


வசூல் வேட்டையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்-போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 20 July 2021 4:04 AM IST (Updated: 20 July 2021 4:04 AM IST)
t-max-icont-min-icon

வசூல் வேட்டையில் ஈடுபட்ட 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டு உள்ளார்.

சேலம்:
வசூல் வேட்டையில் ஈடுபட்ட 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டு உள்ளார்.
வசூல் வேட்டை
சேலம் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஸ்ரீஅபினவ் சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றது முதல் மாவட்டத்தில் குட்கா, மது, சாராய விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். 
மேலும் மாவட்டத்தில் உள்ள போலீசாரின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று முன்தினம் போலீசாரின் விருப்பத்திற்கு ஏற்ப பணி இட மாறுதல் வழங்கினார். அதேபோன்று குற்ற செயல்களில் ஈடுபடும் போலீசாரை கண்டுபிடித்தும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ஆயுதப்படைக்கு மாற்றம்
இந்தநிலையில் மல்லூர் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றி வந்த 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 போலீசார் வாகன சோதனையின் போது  பணம் வசூல் செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்தியதில் அந்த போலீசார் வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சுப்பிரமணி, ஏட்டு ரகுபதி, போலீஸ்காரர் கோபு ஆகிய 4 பேரை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி, சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். மேலும் 4 பேரின் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளார.


Next Story