2 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை பூங்கா மீண்டும் திறப்பு
2 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது.
மேட்டூர்:
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆடி மாத பிறப்பையொட்டி மேட்டூரில் காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டது. மேலும் மேட்டூர் அணை பூங்கா கடந்த 17, 18-ந் தேதிகளில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் 2 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை பூங்கா நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை முதலே மேட்டூரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பூங்காவில் உற்சாகமாக விளையாடி பொழுதை கழித்தனர். மேலும், காவிரி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story