மாவட்ட செய்திகள்

திருவல்லிக்கேணியில் கியாஸ் கசிந்த விபத்தில் உடல் கருகிய தாய்-மகன் சிகிச்சை பலனின்றி சாவு + "||" + Mother-son burnt to death in Tiruvallikeni

திருவல்லிக்கேணியில் கியாஸ் கசிந்த விபத்தில் உடல் கருகிய தாய்-மகன் சிகிச்சை பலனின்றி சாவு

திருவல்லிக்கேணியில் கியாஸ் கசிந்த விபத்தில் உடல் கருகிய தாய்-மகன் சிகிச்சை பலனின்றி சாவு
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில், படுகாயம் அடைந்த தாய்-மகன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.
சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி தேவராஜன் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது 58). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பாத்திமா பேகம் (52) என்ற மனைவியும், நஹீத் (22) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி திடீரென அப்துல் ரஹீம் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது.


இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் அப்போது, வீட்டில் இருந்த 3 பேர் மீதும் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து அப்துல் ரஹீம் மற்றும் அவரது குடும்பத்தினரை தீயணைப்பு படையினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காயம் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்

இருவர் உயிரிழப்பு

அங்கு அப்துல் ரஹீம் 80 சதவீதமும், அவரது மனைவி பாத்திமா பேகம் மற்றும் மகன் நஹீத் ஆகியோர் 70 சதவீத தீக்காயத்துடனும் உடல் கருகிய நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பாத்திமா பேகம் மற்றும் அவரது மகன் நஹீத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்துல் ரஹீம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கரூர் நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ
கரூர் நகராட்சி குப்பைக்கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
2. தனியார் கம்பெனியில் தீ விபத்து 10 மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
மதுரவாயல் அருகே தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்சார மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
3. தனியார் கம்பெனியில் தீ விபத்து 10 மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
மதுரவாயல் அருகே தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்சார மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
4. வடக்கு மாசிடோனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து
வடக்கு மாசிடோனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து 14 பேர் பலி.
5. தீப்பெட்டி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் தீ
சிவகாசியில் தீப்பெட்டி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் தீப்பிடித்தது.