மாவட்ட செய்திகள்

மீன்பிடி ஒழுங்குமுறை திட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: மாமல்லபுரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் + "||" + Opposition to the Fisheries Regulation Scheme Bill: Mamallapuram fishermen strike

மீன்பிடி ஒழுங்குமுறை திட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: மாமல்லபுரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மீன்பிடி ஒழுங்குமுறை திட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: மாமல்லபுரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கடலுக்கு செல்லாமல் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி மாமல்லபுரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்,

டெல்லியில் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வரும் சாகர்மாலா மீன்பிடி ஒழுங்கு முறை திட்ட மசோதாவில் மீனவர்களை பாதிக்கும் பல்வேறு அம்சங்கள் உள்ளதாகவும் அது தங்கள் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் கூறி இந்த சட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இதன் காரணமாக மாமல்லபுரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாததால் கடற்பகுதி படகு ஓட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கருப்பு கொடி ஏற்றினர்

மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதியில் மீன் வாங்க வந்த அசைவ பிரியர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. மேலும் இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், இல்லையென்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் சூழல் ஏற்படும் என்று மாமல்லபுரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த மத்திய அரசின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலம், புதுஎடையூர்குப்பம், கொக்கிலமேடு, வெண்புருஷம், தேவனேரி, நெம்மேலிகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களிலும் அங்குள்ள மீனவர்கள் தங்கள் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு டோக்கன்கள் வழங்கவில்லை; பக்தர்கள் திடீர் போராட்டம்
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு டோக்கன்களை வழங்கவில்லை என பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் கிராம சுகாதார நர்சுகள் போராட்டம்
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார நர்சுகள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. விடுதிக்கு ‘சீல்’ வைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்
விடுதிக்கு ‘சீல்’ வைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் 10 நாள் காலஅவகாசம் அளித்து சென்றனர்.
4. தாசில்தார் மீது தாக்குதல்; தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு தாலுகா அலுவலக ஊழியர்கள் போராட்டம்
தனி தாசில்தாரை தாக்கியதாக தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாசில்தாரை தாக்கியதை கண்டித்து தாலுகா அலுவலக ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. விவசாயிகள் மீதான தடியடியை கண்டித்து பஞ்சாபில் சாலை மறியல் போராட்டம்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் விவசாயிகள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.