வடசென்னை அனல்மின் நிலைய பணிக்கு எதிர்ப்பு: அத்திப்பட்டு கழிமுகப் பகுதியில் மீனவர்கள் போராட்டம்


வடசென்னை அனல்மின் நிலைய பணிக்கு எதிர்ப்பு: அத்திப்பட்டு கழிமுகப் பகுதியில் மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 July 2021 6:12 AM IST (Updated: 20 July 2021 6:12 AM IST)
t-max-icont-min-icon

வடசென்னை அனல்மின் நிலைய பணிக்கு எதிர்ப்பு: அத்திப்பட்டு கழிமுகப் பகுதியில் மீனவர்கள் போராட்டம்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இதன் நிலக்கரி பயன்பாட்டிற்காக அத்திப்பட்டு கழிமுக பகுதியை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த கழிமுகப் பகுதியில் உவர்ப்பு நீரில் வளரும் அலையாத்தி காடுகளை அழிப்பதால் நீர் உயிரினங்கள் இறால், மீன், நண்டு ஆகியவை அழிந்து வரும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மின்வாரிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று காட்டுகுப்பம் மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 25-க்கும் மேற்பட்ட படகுகளில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்து குவிந்த பின்னர் கழிமுகப் பகுதியில் கட்டுமானப் பணி நடந்து வரும் இடத்தில் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story