திருப்போரூர் போலீஸ் நிலையம் எதிரே போலீசார் வாகனத்தை வழிமறித்து பெண் முற்றுகை போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ஆலத்தூர் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் சுரேந்தர் (வயது 36). இவருக்கும் அவரது உறவினர் செந்தில் என்பவருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செந்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்போரூர் போலீசார் சுரேந்தரை கைது செய்து சிறையில் அடைக்க கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதனை கண்டிக்கும் விதமாக சுரேந்தர் மனைவி பூவிழி மற்றும் சுரேந்தர் தாய், உள்ளிட்டோர் திருப்போரூர் போலீஸ் நிலையம் எதிரே நடுரோட்டில் போலீசார் வாகனத்தை வழிமறித்து படுத்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு தலைப் பட்சமாக செயல்படுவதை போலீசார் கைவிட வேண்டும் எனகூறி பூவிழி கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் திருப்போரூர் போலீசார் சுரேந்தர் மனைவியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் எதிர்தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story