தாமரை குளத்தை தூய்மை செய்து மீண்டும் படகு இல்லம் அமைக்க வேண்டும்


தாமரை குளத்தை தூய்மை செய்து மீண்டும் படகு இல்லம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 July 2021 6:34 PM IST (Updated: 20 July 2021 6:34 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் உள்ள தாமரை குளத்தை தூய்மை செய்து மீண்டும் படகு இல்லம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள தாமரை குளத்தை தூய்மை செய்து மீண்டும் படகு இல்லம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமரை குளம்

பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலை நகரத்தை எடுத்து கொண்டால் சொல்லும் அளவிற்கு பெரிய அளவில் பொழுதுபோக்கு இடங்கள் இல்லை. சாத்தனூர் அணை, ஜவ்வாதுமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் திருவண்ணாமலையில் இருந்து தொலைவில் உள்ளது.

திருவண்ணாமலை நகர மக்களுக்கு சினிமா தியேட்டர்கள மட்டுமே பொழுது போக்கும் இடமாக உள்ளது. அதுவும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது மூடப்பட்டு உள்ளது. சில சமயங்களில் மக்கள் கிரிவலப்பாதையில் பொழுது போக்குவார்கள்.

திருவண்ணாமலை தண்டராம்பட்டு செல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான தாமரை குளம் உள்ளது. ஏறக்குறைய 2½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில் எப்போதும் நீர் வற்றாமல் இருக்கும். 

படகு இல்லம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் தை மாதத்தில் நடைபெறும் உத்தராயண புண்ணிய கால பிரம்மேற்சவ விழா நிறைவு நாளன்று தாமரை குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். 

இந்த குளத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் மூலம் பல லட்ச ரூபாய் மதிப்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. இந்த படகு இல்லம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே மூடப்பட்டதாக கூறப்படுகிறது. 
அதுமட்டுமின்றி தற்போது தாமரை குளத்தின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுநீரும் கலந்து வருகிறது. சாமி தீர்த்தவாரி நடைபெறும் 

இந்த புனிதமான குளத்தில் கழிவுநீர் கலந்து வருவதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சமீபத்தில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட தலைநகரம் வளர்ச்சி குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தாமரை குளத்தை தூய்மை செய்து மீண்டும் படகு இல்லம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். 

பூங்கா அமைக்கும் பணி

மேலும் தாமரை குளத்தின் அருகில் தனியார் தொண்டு அமைப்பினர் மூலம் தற்போது அழகிய பூங்கா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. 

இந்த பூங்கா செயல்பாட்டிற்கு வரும் சமயத்தில் தாமரை குளத்தில் படகு சவாரியும் மேற்கொள்ளப்பட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். இதனால் திருவண்ணாமலைக்கு தனி அடையாளத்தை அளிக்க வாய்ப்பு உள்ளது. 

எனவே மாவட்ட நிர்வாகம் தாமரை குளத்தை தூய்மை செய்து மீண்டும் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story