மருந்து கடை உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
மருந்து கடை உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
சரவணம்பட்டி
போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை பாதுகாக்கும் வகையில் கோவை மாநகர கிழக்கு சட்டம் ஒழுங்கு போலீஸ் உதவி ஆணையர் அருண் உத்தரவின் பேரில்
சரவணம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரைச் சீட்டு இல்லா மல் மயக்க மருந்து, தூக்க மருந்து உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய கூடாது. போதை தன்மை உள்ள மருந்துகளை கேட்டு இளைஞர்கள் தகராறு செய்தால் புகார் அளிக்க வேண்டும் என்றனர்.
அப்போது மருந்து கடை உரிமையாளர்கள் ஆன்லைனில் இது போன்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது, அதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லமணி மற்றும் ஏட்டு பிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story