ரேஷன் கடை பதிவேட்டில் புகார் பதிவு செய்யலாம்


ரேஷன் கடை பதிவேட்டில் புகார் பதிவு செய்யலாம்
x
தினத்தந்தி 20 July 2021 10:36 PM IST (Updated: 20 July 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடை பதிவேட்டில் புகார் பதிவு செய்யலாம்

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் செயல்படும் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் இணைக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடை தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை அளிக்கும் வகையில் புகார் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்தும் விதமாக, கடலூர் மாவட்டத்தில் செயல்படும் 1,128 முழுநேர ரேஷன் கடைகள், 284 பகுதிநேர ரேஷன் கடைகள் மற்றும் 8 மகளிர் சுயஉதவிக்குழு ரேஷன் கடைகள் என மொத்தம் உள்ள 1,420 ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்கப்படுகிறது.
அதனால் ரேஷன் கடை தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை குடும்ப அட்டைதாரர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் புகார் பதிவேட்டில் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story