முக கவசம் அணியாத 4,843 பேரிடம் அபராதம்


முக கவசம் அணியாத 4,843 பேரிடம் அபராதம்
x
தினத்தந்தி 20 July 2021 10:42 PM IST (Updated: 20 July 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் முக கவசம் அணியாத 4,843 பேரிடம் இருந்து அபராதம் வசூல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்தும் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதை மீறி நோய் பரவலை ஏற்படுத்தும் விதமாக முக கவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு, அபராதமும் விதித்து வருகின்றனர். அதன்படி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 4,843 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூல் செய்துள்ளனர். இது தவிர சமூக இடைவெளியை பின்பற்றாத 14 பேர் மீதும் வழக்குப்பதிவு செயது  அபராதம் வசூலிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 75 ஆயிரத்து 600 அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

வழக்கு

கடந்த மாதம் 14-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முக கவசம் அணியாத 34 ஆயிரத்து 199 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 433 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, ரூ.70 லட்சத்து 56 ஆயிரத்து 300 அபராத தொகையை போலீசார் வசூல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story