முள்ளூர் கிராமத்தில் துணைக்கோள் நகரம்
புதுக்கோட்டை முள்ளூர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் துணைக்கோள் நகர பணிகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை, ஜூலை.21-
புதுக்கோட்டை முள்ளூர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் துணைக்கோள் நகர பணிகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.
துணைக்கோள்நகரம்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் எஸ்.ஜே.சிரு புதுக்கோட்டைக்கு வருகை வந்தார். பின்னர் அவர் புதுக்கோட்டை ஒன்றியம் முள்ளூர் கிராமத்தில் நடைபெற்றுவரும் துணைக்கோள் நகரம் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த துணைக்கோள் நகரம் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ.56 கோடியே 31 லட்சத்தில் 1,603 வீட்டுமனைகளுடன் அமைக்கப்பட உள்ளது. இதில் உயர் வருவாய் பிரிவில் 339 மனைகள் ஒவ்வொன்றும் தலா 2,711 சதுரஅடி பரப்பளவிலும், மத்திய வருவாய் பிரிவில் 280 மனைகள் தலா 2,325 சதுரஅடி பரப்பளவிலும், குறைந்த வருவாய் பிரிவில் 218 மனைகள் தலா 1,453 சதுர அடி பரப்பளவிலும், பொருளாதாரத்தில் நலிவுற்றப் பிரிவில் 766 மனைகள் தலா 431 சதுர அடி பரப்பளவிலும் என மொத்தம் 1,603 வீட்டு மனைகள் அமைக்கப்பட உள்ளது.
இந்த துணைக்கோள் நகரத்தில் மழைநீர் வடிகால் அமைப்பு, 80 அடி, 60 அடி மற்றும் 40 அடி அகல தார் சாலைகள், ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் இணைப்பு மற்றும் தெருவிளக்கு வசதி, பள்ளி மனை, வணிக மனைகள், பொது உபயோக மனை மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மனை பிரிவாக இது அமைக்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமையும்.
6 மாதத்தில்...
6 மாத காலத்திற்குள் இப்பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தலுக்கிணங்க பழுதடைந்த வீட்டுவசதி வாரிய வீடுகளை சீரமைக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தமிழகம் முழுவதும் ரூ.4 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 108 திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர், அவர் புதுக்கோட்டை நகராட்சி, கம்பன்நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.4 கோடியே 39 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 15 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைமைப் பொறியாளர் சரவணன், கண்காணிப்பு பொறியாளர் தியாகராஜன், செயற்பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் ஜேக்கப், உதவி பொறியாளர் பார்த்திபன் மற்றும் பலர் உடன் சென்றனர்.

Related Tags :
Next Story