கோவில்களில் இரவு நேர காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூலை.21-
பொன்னமராவதி, திருமயம், அறந்தாங்கி, கே.புதுப்பட்டி, நமணசமுத்திரம் உள்பட மாவட்டத்தில் உள்ள 15 கோவில்களில் இரவு நேர காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் முன்னாள் படைவீரர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன. இதில் சேர 62 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், திடகாத்திரம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். மாத ஊதியம் ரூ.7 ஆயிரத்து 300 வழங்கப்பட்டு வருகிறது. எனவே விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-1 ஆகியவற்றுடன் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பித்து பயனடையலாம். இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story