மண் அள்ளிய 6 பேர் கைது
மண் அள்ளிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி,
திருவாடானை மண்டல துணை தாசில்தார் சேதுராமன் தலைமையில் வருவாய்துறையினர் மற்றும் போலீசார் தொண்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது முகில்தகம் கிராமத்தில் அனுமதியின்றி மண் அள்ளப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ெபாக்லைன் எந்திரம், 5 டிராக்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த வருவாய் துறை யினர் மற்றும் போலீசார் இதுதொடர்பாக மதுரை மாவட்டம் மேலூர் படையனேந்தல்பட்டி ராம்குமார், முகிழ்தகம் மேலக்கோட்டை கோசல் ராம், தினேஷ், முத்துராமு, சுபாஷ், சம்பை கிராமத்தைச் சேர்ந்த விஜயன், ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதேபோல் திருவாடானை அருகே உள்ள சேந்தனி கிராமத்தில் அரசு அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக் டர்களை திருவாடானை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா பறிமுதல் செய்தார். மேலும் இதுதொடர்பாக தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story