முககவசம் அணியாவிட்டால் கடைகளுக்கு சீல்


முககவசம் அணியாவிட்டால் கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 20 July 2021 11:15 PM IST (Updated: 20 July 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

முககவசம் அணியாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கீழக்கரை, 
முககவசம் அணியாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கீழக்கரை தாசில்தார் முருகேசன், தலைமையில் கொரோனா 3-வது அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைவரும் வெளியில் செல்லும்போது சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிந்து இருக்க வேண்டும். 
கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். 
வாடிக்கையாளர்களுக்கு முககவசம் அணிவது குறித்து வியாபாரிகள் வலியுறுத்த வேண்டும். 
 தவறும் பட்சத்தில் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கடைகளை மூடி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து கொரோனா தொற்று 3-வது அலை வராமல் தடுப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் துணை தாசில்தார் பழனிகுமார், நகராட்சி ஆணையர் பூபதி மற்றும் வர்த்தக சங்க தலைவர் ஜகுபர், மளிகை கடை, காய்கறி கடை, மீன் கடை, கறிக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 
அபராதம்
முன்னதாக துணை தாசில்தார் பழனிகுமார் தலைமையிலான வருவாய் அதிகாரிகள் கீழக்கரை சீதக்காதி சாலையில் முககவசம் அணியாத வர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Next Story