இளையான்குடி,
இளையான்குடியை சேர்ந்த அப்துல்லத்தீப்(வயது 60), ராவுத்தர் அன்சார்அலி ஆகிய இருவரது குடும்பத்துக்கும் மேலாயூர் கிராமத்தில் பூர்வீக நிலம் உள்ளது. இதில் பாதை சம்பந்தமாக இருதரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராவுத்தர் அன்சார்அலியின் மனைவி கலிபா நஸ்ரின்பாத்திமா(வயது 34), சேட் என்ற ராவுத்தர் அன்சார்அலி(45), காதர் இப்ராகிம்(59), ஷேக்சுல்தான் ஆகியோர் பாதை மறித்து அப்துல்லத்தீப்பை இந்த வழியாக செல்லக்கூடாது என கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்துல்லத்தீப் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது இளையான்குடி போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.