கல்யாண வெங்கடரமணசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.8¾ லட்சம்
கல்யாண வெங்கடரமணசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.8¾ லட்சம் இருந்தது.
கரூர், ஜூலை.21-
தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக தங்கம், வெள்ளியிலான பொருட்கள், பணம் ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்தநிலையில் நேற்று தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. தாந்தோன்றிமலை உதவி ஆணையர் நந்தகுமார், கரூர் உதவி ஆணையர் சூரியநாராயணன், திருப்பூர் உதவி ஆணையர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ரூ.8 லட்சத்து 87 ஆயிரத்து 409 ரொக்கமும், தங்கம் 10 கிராமும், வெள்ளி 79 கிராமும் கிடைத்திருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story