கம்பு சாகுபடியில் மகசூல் குறைவு
ஆலங்குளம் பகுதியில் கம்பு சாகுபடியில் மகசூல் குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் கம்பு சாகுபடியில் மகசூல் குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கம்பு சாகுபடி
ஆலங்குளம் பகுதியில் கொங்கன்குளம், தொம்பகுளம், கோடாங்கிபட்டி, மேல பழையாபுரம், கீழபழையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் கம்பு பயிரிட்டுள்ளனர். இந்த கம்பு பிராய்லர் கோழிகளுக்கு தீனியாக பயன்படுகிறது.
இதுகுறித்து விவசாயி வேல்முருகன் கூறியதாவது:- ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கம்புசாகுபடி செய்யபட்டு உள்ளன.
விவசாயிகள் கவலை
இந்த கம்பானது 4 மாதத்தில் பலன் தரக்கூடியது ஆகும். கிணற்று பாசனம் மூலம் கம்பினை சாகுபடி செய்து வருகிறோம்.
கடந்த முறை 1 ஏக்கருக்கு 12 குவிண்டால் முதல் 15 குவிண்டால் வரை மகசூல் கிடைத்தது. ஆனால் தற்போது ஏக்கருக்கு 10 குவிண்டால் வரை தான் கிடக்கிறது. அதேபோல் கடந்த ஆண்டு 1 குவிண்டால் கம்பு ரூ.2 ஆயிரம் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
தற்போது ரூ.1,700 முதல் ரூ.1800 வரை தான் விற்பனை ஆகிறது. மகசூலும் குறைவு, விலையும் குறைவு என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நாமக்கல்
இங்கு விளைவிக்கப்படும் கம்பு எண்ணற்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டாலும் நாமக்கல்லுக்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது.
கடினப்பட்டு உழைத்தும், எதிர்பார்த்த மகசூல் கிடைக்காததால் நாங்கள் சோர்வில் உள்ளோம். இருப்பினும் எங்களின் சூழ்நிலை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story