அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட தொடங்கின


அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட தொடங்கின
x
தினத்தந்தி 21 July 2021 12:55 AM IST (Updated: 21 July 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வுகளின் படி அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட தொடங்கின.

விருதுநகர், 
ஊரடங்கு தளர்வுகளின் படி அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட தொடங்கின. 
அனுமதி 
கொரோனா 2-வது அலை தாக்கத்தால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த வகையில் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது தொழிற்பயிற்சி நிலையங்கள் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைப்படி செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
 மேலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை தொடங்கியுள்ளது. 
இதையடுத்து  மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சிநிலையங்கள் அனைத்தும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்பட தொடங்கியுள்ளது.
பயிற்சி ேநரம் 
 விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாவது அணியில் 240 பயிற்சியாளர்களும், 2-வது அணியில் 260 பயிற்சியாளர்களும் உள்ளனர். அருப்புக்கோட்டை  பயிற்சி நிலையத்தில் முதலாவது அணியில் 85 பயிற்சியாளர்களும் 2-வது அணியில் 80 பயிற்சியாளர்களும் உள்ளனர். 
சாத்தூர் தொழில் பயிற்சி நிலையத்தில் முதல் அணியில் 80 பயிற்சியாளர்களும், 2-வது அணியில் 75 பயிற்சியாளர்களும் உள்ளனர். முதல்அணி பயிற்சியாளர்களுக்கு காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், 2-வது அணி பயிற்சியாளர்களுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விதிமுறை 
மேலும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி அனைத்து பயிற்சியாளர்களும் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து பயிற்சியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
இதனை பயிற்றுனர்கள் முறையாக கண்காணித்து வருகின்றனர். இதுபற்றி விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- 
தமிழக அரசின் வழிகாட்டுதல் விதிமுறைப்படி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 50 சதவீத பயிற்சியாளர்களுடன் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியாளர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இதனை பயிற்சி அளிப்பவர்கள் முறையாக கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 10 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2 தொழிற்பயிற்சி நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. மற்ற 8 பயிற்சி நிலையங்களும் செயல்படவில்லை. தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story