மைசூரு மிருகக்காட்சி சாலையில் சிறுத்தையை தத்தெடுத்த நடிகர் ரிஷப் ஷெட்டி


நடிகர் ரிஷப் ஷெட்டி.
x
நடிகர் ரிஷப் ஷெட்டி.
தினத்தந்தி 20 July 2021 8:44 PM GMT (Updated: 20 July 2021 8:44 PM GMT)

மைசூரு மிருகக்காட்சி சாலையில் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, சிறுத்தை ஒன்றை தத்தெடுத்தார்.

மைசூரு: மைசூரு மிருகக்காட்சி சாலையில் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, சிறுத்தை ஒன்றை தத்தெடுத்தார். 

மைசூரு மிருகக்காட்சி சாலை

கர்நாடக மாநிலத்தின் சுற்றுலா நகரம், அரண்மனை நகரம் என்று மைசூரு அழைக்கப்படுகிறது. மைசூருவில் சாமராஜேந்திரா மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையில் சிங்கம், சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்ட விலங்குகளும், ஏராளமான பறவை இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள விலங்குகள், பறவைகளை காண கர்நாடகம் மட்டுமின்றி ெவளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ெசல்வார்கள். 

இந்த நிலையில் கொரோனா காரணமாக மிருகக்காட்சி சாலை மூடப்பட்டது. முதல் அலை மற்றும் 2-வது அலையின்போது மிருகக்காட்சி சாலை மூடப்பட்டதாலும், சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்ததாலும் மிருகக்காட்சி சாலைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை பராமரிக்க முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும் மிருகக்காட்சி சாலை நிர்வாகம் திணறியது. 

விலங்குகள் தத்தெடுப்பு

இந்த நிலையில், மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பணக்காரர்கள் நன்கொடை வழங்க வேண்டும் என்றும், இங்குள்ள விலங்குகளை தத்தெடுக்க வேண்டும் என்றும் மிருகக்காட்சி சாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த நிலையில், கன்னட நடிகர் தர்ஷன், மைசூரு மிருகக்காட்சி சாலையில் ஒரு விலங்கை தத்தெடுத்ததுடன், தனது ரசிகர்கள், பொதுமக்களிடம் விலங்குகளை தத்தெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

அதன்பின்னர், மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், பணக்காரர்கள், தொழில் அதிபர்கள் என பலர் சென்று பணம் செலுத்தி விலங்குகளை தத்தெடுத்து வருகிறார்கள். இதனால், மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு வருவாய் அதிகரித்துள்ளது. 

நடிகர் ரிஷப் ஷெட்டி

இந்த நிலையில் பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு வந்தார். அவர் தனது மகன் ரன்வித் ஷெட்டி பெயரில் மிருகக்காட்சி சாலையில் இருந்து இந்திய லெபார்ட் வகையை சேர்ந்த சிறுத்தையை ரூ.1 லட்சம் கொடுத்து ஓராண்டுக்கு தத்தெடுத்துள்ளார். சமீபத்தில் தான், ரிஷப் ஷெட்டின் மகன் ரன்வித் ஷெட்டி 2-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதன்காரணமாக அவர், சிறுத்தையை தத்தெடுத்து உள்ளார். 
இதுகுறித்து மைசூரு மிருகக்காட்சி சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story