மாவட்ட செய்திகள்

மனைவி திட்டியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை + "||" + Worker commits suicide by drinking poison after wife insults him

மனைவி திட்டியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மனைவி திட்டியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மனைவி திட்டியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்(வயது 42). கூலித் தொழிலாளியான இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாகவும், இதனால் அவருடைய மனைவி, தினமும் குடித்துவிட்டு வருகிறீர்களே, உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் குழந்தைகளை யார் பார்ப்பது என்று கேட்டு திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சவுந்தரராஜன் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்துவிட்டு, வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பட்டதாரி வாலிபர் தற்கொலை
பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2. பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை
பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. தாய் திட்டியதால் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை
கியாஸ் சிலிண்டர் வாங்க மாட்டியா? என தாய் திட்டியதால் விரக்தி அடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. முதியவர் தற்கொலை
முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
5. பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.