மாவட்ட செய்திகள்

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்; அழகான பெண் குழந்தை பிறந்தது + "||" + 108 Childbirth for a woman in an ambulance; Beautiful baby girl was born

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்; அழகான பெண் குழந்தை பிறந்தது

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்; அழகான பெண் குழந்தை பிறந்தது
108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரனின் மனைவி விஜயலட்சுமி (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த விஜயலட்சுமிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் விஜயலட்சுமியை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் டிரைவர் மதுபாலன் வாகனத்தை நிறுத்தினார். இதையடுத்து மருத்துவ உதவியாளர் சுகன்யா பிரசவம் பார்த்தார். இதில் விஜயலட்சுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.