மாவட்ட செய்திகள்

1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine for 10 lakh people

1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:

13 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11,395 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 10,993 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 6 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 2 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 3 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 2 பேர் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 187 பேரில் 37 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 215 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய அறிவிப்பின்படி கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.
தடுப்பூசி
மாவட்டத்தில் நேற்றுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 309 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 15,173 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் என மொத்தம் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 482 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் 2,273 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 3,780 யூனிட் கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. புதிதாக 19 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. 20 பேருக்கு கொரோனா தொற்று
20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. 21 பேருக்கு புதிதாக கொரோனா
மதுரையில் 21 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 70 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 70 பேர் பாதிப்பு 3 பேர் பலி.