காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை
காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நேற்று பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நேற்று பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை தொழுகை
காயல்பட்டினத்தில் உள்ள 40 பள்ளிவாசல்களிலும், 60 பெண்கள் தைக்காக்களிலும், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகைகள் பள்ளிவாசல்களில் நடைபெற்றது. ஆண்டுதோறும் கடற்கரையில் நடைபெறும் சிறப்பு தொழுகை இந்த ஆண்டும் நடைபெறவில்லை. கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசின் அனுமதி இல்லாத நிலையில் கடற்கரையில் எவ்வித கூட்டங்களும் நடைபெறவில்லை.
இதனால் அவரவர் சார்ந்த பள்ளிவாசல்களில் இந்த தொழுகையை நடத்தினர்.
பள்ளிவாசல்கள்
இங்கு உள்ள பிரபலமான பள்ளிவாசல்களான அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி, குருவித்துறை பள்ளி, ஆறாம் பள்ளி, குட்டியா பள்ளி, , பெரிய ஜும்மா பள்ளிவாசல், சிறிய ஜும்மா பள்ளிவாசல், கொடிமர சிறுநயினார் பள்ளிவாசல், சிறிய குத்பா பள்ளிவாசல், மொகுதூம்பள்ளிவாசல், முகைதீன் பள்ளி, காட்டும் தூம் பள்ளி, தாயிம் பள்ளி, கோமான் மொட்டை யார் பள்ளி, இரட்டை குளத்து பள்ளி, பிரசித்தி பெற்ற தைக்கா பள்ளி, அருஷியா பள்ளி, காட்டு தைக்கா பள்ளி, உட்பட 40 பள்ளிவாசல்களிலும் 60 பெண்கள் தைக்காகளிலும் இந்த தொழுகைகள் நடைபெற்றது. தொழுககையை தொடர்ந்து பள்ளிவாசல் முடிந்து வெளியே வந்த பிறகு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
தவ்ஹீத் ஜமாத் பேரவை
காயல்பட்டினம் தவ்ஹீத் ஜமாத் பேரவையின் சார்பில் தியாகத்திருநாள் தொழுகை காயல்பட்டினம் பஜாரில் உள்ள காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. தொழுகையினை காயல்பட்டினம் தவ்ஹீத் ஜமாத் பேரவை தலைவர் கே எஸ் எம் ஹனிபா, நடத்தினார்குத்பா பேருரையை யாசர் அராபத் நடத்தினார். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இதே போல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரவை சார்பில் காயல் பட்டணத்திலுள்ள குட்டியா பள்ளிவாசல் வளாகத்திற்குள் பெருநாள் தொழுகை நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் இமாம் முகைதீன் அப்துல் காதர் தொழுகை நடத்தினார். குத்பா பேருரையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் தமிமுன் அன்சாரி உரையாற்றினார்.
குருவித்துறை
மேலும் காயல்பட்டினம் குருவித்துறை பள்ளிவாசலில் தொழுகையினை ஹாபிழ் அபூபக்கர் நடத்தினார். குத்பா பிரசங்கத்தினை ஜமாத்துல் உலமா சபை தலைவர் பாதுல்அஸ்ஹாப் நிகழ்த்தினார். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட முஸ்லிம்லீக் துணைத்தலைவர் மன்னர் பாதுல்அஸ்ஹாப், காயல்பட்டினம் நகர அ.தி.மு.க. செயலாளர் காயல் மவுலானா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் காயல் மகபூப், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஷாஜஹான், ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளிவாசல் நிர்வாகிகளான காஜா முகைதீன் ஹபிபுர் ரஹ்மான், ஆலிம், இளைஞர் ஐக்கிய முன்னணியின் தலைவர் செய்யது அகமது, சொளுக்கு உட்பட பலர் கலந்து கொண்டனர். கொடி மர சிறுநயினார் பள்ளியில் நடைபெற்ற தொழுகையில் காயல்பட்டினம் நகர தி.மு.க. செயலாளர் முத்து முகமது, உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி டவுன் ஜாமியா பள்ளி வாசலில் நேற்று பக்ரீத் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை காலை 7 மணிக்கு தொடங்கி 7.30 மணி வரை நடந்தது. தொழுகையை பள்ளி வாசல் இமாம் முகமது அலி நடத்தினார். தொழுகையில் பள்ளி வாசல் தலைவர் சிந்தாமதார், துணை தலைவர் அனிபா, செயலாளர் உமாயூன், பொருளாளர் பீர் மைதீன், அமனுல்லா கான், நிஜாம் மற்றும் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் முஸ்லிம் மக்களுக்கு குர்பானி இறைச்சியை பள்ளி வாசல் நிர்வாகிகள் வழங்கினா்.
Related Tags :
Next Story