அ.ம.மு.க. நிர்வாகி தோட்டத்தில் திருடிய 3 பேர் கைது


அ.ம.மு.க. நிர்வாகி தோட்டத்தில் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 July 2021 7:09 PM IST (Updated: 21 July 2021 7:09 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே அ.ம.மு.க. நிர்வாகி தோட்டத்தில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தை சேர்ந்தவர் தீபாவளிராஜ் (வயது 48). இவர், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு, ஆனைமலையன்பட்டியில் திராட்சை தோட்டம் உள்ளது. 

அந்த தோட்டத்தில் திராட்சை கொடிகளுக்கு பந்தல் போடுவதற்காக, 60 கிலோ கட்டுக்கம்பிகள் மற்றும் 100 அடி நீளமுள்ள டைமண்ட் கம்பிகளை ஒரு அறையில் அவர் வைத்திருந்தார். மேலும் 3 ஆயிரம் அடி நீளமுள்ள சொட்டுநீர் பாசன குழாய்களும் அங்கு இருந்தன.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் அவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் தீபாவளிராஜ் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆலைமலையன்பட்டியை சேர்ந்த மல்லையன்சாமி (46), முத்தையா (41), அய்யனார் (28) என்று தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story