மாத ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு
கம்மாபுரம், மாத ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கலெக்டரை சந்தித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு அளித்தனர்.
கடலூர்,
கம்மாபுரம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பு தலைவர் வளர்மதி ராஜசேகரன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கதிரவன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் ஆவாஸ் பிளஸ் வீடு வழங்கும் திட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் ஆலோசனை பேரில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். என்.எல்.சி. நிறுவனம் அதை சுற்றியுள்ள கிராம மேம்பாட்டிற்கு சி.எஸ்.ஆர். நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி வங்கி கணக்குகளில் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் கூட்டு கையொப்பம் இடும் முறையை மாற்றி ஊராட்சி தலைவருக்கு அதிகாரம் வழங்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணியாற்றி வரும் செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மாத ஊதியமாக வழங்க வேண்டும். போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story