வேலூரில் மசூதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை
வேலூரில் மசூதிகளில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.
வேலூர்
பக்ரீத் பண்டிகை
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. ஈகைத்திருநாள் எனப்படும் இந்த பண்டிகை நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து உண்டு மகிழ்வார்கள். பக்ரீத் பண்டிகையான நேற்று உலகம் முழுவதும் கொண்டாடினர். வேலூரிலும் அனைத்து மசூதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். குழந்தைகள் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. மசூதிகளில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி தொழுகை நடத்தப்பட்டது. இதைமுன்னிட்டு அனைத்து மசூதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கோட்டைக்கு செல்ல அனுமதி மறுப்பு
வேலூர் கோட்டை வளாகத்தில் மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. காந்தி சிலையின் அருகே கோட்டைக்கு செல்லும் இருபுறமும் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. நேற்று அதிகாலையில் நடைபயிற்சிக்கு வந்தவர்கள் கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
எனவே அவர்கள் வெளியே உள்ள பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டனர். மேலும் கோட்டையை சுற்றிப்பார்க்க வந்தவர்களையும், ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வந்தவர்களையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story