மாவட்ட செய்திகள்

42 பேருக்கு கொரோனா பாதிப்பு, 2 பேர் பலி + "||" + Corona damage to 42 people

42 பேருக்கு கொரோனா பாதிப்பு, 2 பேர் பலி

42 பேருக்கு கொரோனா பாதிப்பு, 2 பேர் பலி
42 பேருக்கு கொரோனா பாதிப்பு, 2 பேர் பலி
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவினால் 37 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் மேலும் 42 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 மேலும் 42 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிரிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரத்து 716 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46,113 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1089 பேர் பலியாகி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.