மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசியக் கொடியுடன் தம்பதி தர்ணா + "||" + Kallkkuruchi Before the Collector Office Couple Dharna with the national flag

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசியக் கொடியுடன் தம்பதி தர்ணா

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசியக் கொடியுடன் தம்பதி தர்ணா
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசியக்கொடியுடன் தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி, 

உளுந்தூர்பேட்டை தாலுகா எஸ்.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் ராமர் என்பவர் அவரது மனைவியுடன் நேற்று முன்தினம் மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசியக்கொடியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எஸ்.மலையனூர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து இருந்ததாகவும் இதை ராமர் தடுக்க முயன்றபோது அதிகாரிகள் சிலர் ஆக்கிரமிப்பாளருக்கு சாதமாக செயல்பட்டதோடு தன் மீது பொய் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் தம்பதியர் போராட்டம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டரிடம் கொடுக்கும் படி கூறி சமாதானம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட ராமர் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றபோது விபத்து - நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2. கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு பதில் ஏன் கையகப்படுத்தக் கூடாது? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு பதிலாக, உரிய இழப்பீட்டுத் தொகையை இந்து சமய அறநிலையத்துறைக்கு செலுத்திவிட்டு அந்த இடத்தை ஏன் கையகப்படுத்தக்கூடாது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.