மாவட்ட செய்திகள்

பாதை வசதி இல்லாமல் மூதாட்டியை டோலிகட்டி தூக்கி சென்றனர் + "||" + The old woman was carried away by the tolikatti

பாதை வசதி இல்லாமல் மூதாட்டியை டோலிகட்டி தூக்கி சென்றனர்

பாதை வசதி இல்லாமல் மூதாட்டியை டோலிகட்டி தூக்கி சென்றனர்
மூதாட்டியை டோலிகட்டி தூக்கி சென்றனர்
அணைக்கட்டு

அணைக்கட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மானியக் கொல்லையை அடுத்த கொல்லைமேட்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சரியான பாதை வசதி இல்லை. இதனால் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் பாதை வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வரப்பு வழியில் வரும்போது தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

 இதனையடுத்து அவரை வாகனத்தில் கொண்டு செல்வதற்கு பாதை வசதி இல்லாததால் அந்த மூதாட்டியை உறவினர்கள் டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.