மாவட்ட செய்திகள்

மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் + "||" + case

மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்
மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெற்கு வாணிவீதி ஊருணி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்ததை கண்டனர். உடனடியாக அங்கு சென்றபோது வருவாய்த்துறையினரை கண்டதும் அப்படியே போட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம், டிராக்டர், டிரைலர், 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றி ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் பெருங்குளம் பாலமுரளி கிருஷ்ணா, கலைச்செல்வம் தெற்கு வாணி வீதி ஞானராஜ் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.