கார்களில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு ரோஜா பூ வழங்கி பாராட்டிய போலீசார்


கார்களில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு ரோஜா பூ வழங்கி பாராட்டிய போலீசார்
x
தினத்தந்தி 21 July 2021 5:45 PM GMT (Updated: 2021-07-21T23:18:00+05:30)

கார்களில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு ரோஜா பூ வழங்கி பாராட்டிய போலீசார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊட்டி சேரிங்கிராசில் நேற்று நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் ஊட்டி நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் ஆகியோர் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை பாராட்டும் வகையில் ரோஜா பூ வழங்கினர். 

மேலும் ஹெல்மெட் அணிவது, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வந்த கார்களில் சீட் பெல்ட் அணிந்து செல்பவர்களை பாராட்டும் வகையில் ரோஜா பூ மற்றும் துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கினர். 1-ந் தேதிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story