ஊட்டி இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை


ஊட்டி இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 21 July 2021 5:48 PM GMT (Updated: 2021-07-21T23:19:24+05:30)

ஊட்டி இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை.

ஊட்டி,

ஊட்டி சேரிங்கிராசில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நேற்று ஒரே நாளில் 1000 மணி ஜெபமாலை தியானம் மரியன்னைக்காக ஒப்புக்கொடுக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. பங்கு தந்தை ஸ்தனிஸ் தலைமையில் காலை 6.30 மணிக்கு திருப்பலியுடன் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. ஆலயத்தில் உள்ள குடும்பங்கள் 30-க்கும் மேல் அன்பியங்களாக பிரிக்கப்பட்டு, 2 முதல் 3 அன்பியங்களுக்கு அரை மணி நேரம் ஒதுக்கி தொடர்ந்து ஜெபிக்கப்பட்டது. 

இந்த 1000 மணி ஜெபமாலையில் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று நீங்கவும், திருச்சபைக்காகவும், 125-வது ஆண்டு ஜீபிலிக்காகவும், இறை அழைத்தலுக்காகவும், இறந்தவர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. கிறிஸ்தவர்கள் கையில் ஜெபமாலை மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியை ஆலய வாழும் ஜெபமாலை குழுவினர் ஏற்பாடு செய்தனர். முன்னதாக மாதா சொரூபம் ஊர்வலமாக எடுத்து வந்து பலிபீடத்தில் வைக்கப்பட்டது.

Next Story