மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 28-ந்தேதி கடைசி நாள்


மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க  28-ந்தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 21 July 2021 6:09 PM GMT (Updated: 2021-07-21T23:39:44+05:30)

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 28-ந்தேதி கடைசி நாளாகும்.

புதுக்கோட்டை, ஜூலை.22-
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 28-ந்தேதி கடைசி நாளாகும்.
மாணவர் சேர்க்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு தொழிற் பயிற்சி நிலையம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே மாணவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம்-1) வந்து நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
28-ந்தேதி கடைசிநாள்
ஜூலை 2021  முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் ஏப்ரல் 2021-ல் தேர்ச்சி அடைந்த 10-ம் வகுப்பு மாணவர்கள், 9-ம் வகுப்பு மதிப்பெண்ணை இணைக்கவேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
 தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன. விண்ணப்ப கட்டணம் ரூ.50 -ஐ கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க் வாயிலாக செலுத்தலாம்.  விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 28-ந்தேதி ஆகும்.
மேலும், விவரங்களுக்கு தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.  இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story