நாமக்கல் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


நாமக்கல் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 21 July 2021 6:29 PM GMT (Updated: 21 July 2021 6:29 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:
பக்ரீத் பண்டிகை
நாடு முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடினர். இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. நாமக்கல்லில் சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் கூடிய முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
இதேபோல் பேட்டை பள்ளிவாசல், கோட்டை திப்புசுல்தான் பள்ளிவாசல், மாருதி நகர் பள்ளிவாசல் என நகர் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று காலையில் சிறப்பு தொழுகை நடந்தது. 
திருச்செங்கோடு
திருச்செங்கோடு டவுன் ஜாமியா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. காலை 7.30 மணி, 8.30 மணி மற்றும் 9.30 மணி என தனித்தனியாக இந்த தொழுகை நடந்தது. இதேபோல் சங்ககிரி ரோட்டில் உள்ள பாத்திமா பள்ளிவாசல் மற்றும் கூட்டப்பள்ளி பள்ளிவாசலிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து, சமூக இடைவெளியுடன் தொழுகைகள் நடைபெற்றன.
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். மேலும் ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Next Story