கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 22 July 2021 12:22 AM IST (Updated: 22 July 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

நொய்யல் 
கரூர் மாவட்டம் ஆவரங்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 50). இவரது தோட்டம் அருேக 50 அடி ஆழத்தில் விவசாய கிணறு உள்ளது. அதில் 20 அடிக்கு தண்ணீர்உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த வீரமணிக்கு சொந்தமான எருமை மாடு ஒன்று கிணற்றுகள் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்தனர். பின்னர் கிணற்றுக்குள் இறங்கி எருமை மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர். பின்னர்உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Related Tags :
Next Story