வேதாச்சலம் பகுதியில் சேதமடைந்த கழிவுநீர் வடிகால்-சாலை சீரமைக்கப்படுமா?


வேதாச்சலம் பகுதியில் சேதமடைந்த கழிவுநீர் வடிகால்-சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 22 July 2021 12:24 AM IST (Updated: 22 July 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

வேதாச்சலம் பகுதியில் சேதமடைந்த கழிவுநீர் வடிகால்-சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தோகைமலை
கழிவு நீர் வடிகால்-சாலை
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் வேதாச்சலம்பகுதியில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி காவலர் குடியிருப்பு தேவாலயமும் உள்ளன. தோகைமலை காவல் நிலையம் குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் சாலையில் கழிவுநீர் வடிகால் 10 ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டது. தற்போது சாலையும் வடிகால் வாய்க்காலும் சேதமடைந்து ஆபத்தையும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த சாலை பரந்தாடி வரை செல்கிறது. அதுமட்டுமின்றி வீதிகளுக்கு செல்லும் மெயின் சாலையாக உள்ளது. மேலும் சாலை குண்டும், குழியுமாக குறுகலாகவும் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர்கள்  சில நேரங்களில் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. மேலும் குறுகலான சாலையாக இருப்பதால் வாகனங்கள் வந்தால் பொதுமக்கள் ஒதுங்கும்போது, சில நேரங்களில் கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து விடுகின்றனர். மேலும் அந்த கழிவுநீர் வடிகால் மிகவும் உடைந்த நிலையில் உள்ளது. 
பொதுமக்கள் கோரிக்கை 
இவ்வற்றை சரிசெய்ய அப்பகுதி பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து  கழிவுநீர் வடிகால் மற்றும் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story